வைகோ வை விருதுநகரின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள் ஏனென்றால்...
- வைகோ ஒரு மிகச் சிறந்த பாராளுமன்றவாதி.
அவர் அவசரத்திற்கு அரசியலுக்கு வந்த பணக்கார வேட்பாளரைப் போல் பணம் பண்ணும் வியாபாரி இல்லை மற்றும் நானூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து இங்கு வந்து கட்டாயம் மக்கள் சேவை செய்வேன் என்று பொய் சொல்லும் நாடகவாதி வேட்பாளரும் இல்லை. - மிகச் சிறந்த ஜனநாயக உள்கட்டமைப்பைக் கொண்ட மதிமுக என்ற கடசியின் தலைவர்
- கட்சியையும், தம் அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வையையும் தமது பிள்ளைகளுக்காக அல்லது குடும்பத்திற்காக அதன் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கம் இல்லாதவர்.
- யாரும் எப்பொழுதும் தொடர்பு கொள்ளக் கூடிய எளிமையான ,பந்தா, பகட்டில்லாத அரசியல்வாதி , தலைவர்.
- சந்தர்ப்பம் கிடைத்தபோதொல்லம், நினைத்த துறைக்கு மந்திரியாகலாம், கோடிகளை குவிக்கலாம் என்ற குறுகிய நோக்கமில்லாதவர்.
- உள்ளொன்று வைத்து நாக்கில் ஒன்று பேசும் பழக்கமில்லாதவர். உண்மையானவர்.
- லட்சக்கணக்கான பேருக்கு படிப்பதற்கு சிபாரிசும், லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாங்கியும் கொடுத்தவர். அவர்களிடம் கடசி நிதிக்கென்று கூட ஒரு ரூபாய் காசு கூட வசூலிக்க அனுமதிக்காதவர்.
- தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்.
- ஈழத்தில் தமிழரின் உரிமைக்காக உலகெங்கும் குரல் கொடுப்பவர். இங்கிலாந்தில், பாராளுமன்றத்தில் வைகோ அவர்கள் கொளுத்திய உணர்வுத் தீ இன்று கொழுந்து விட்டு எரிகிறது. ஈழத்திற்காய் பிரிட்டன் அரசாங்கம் குரல் கொடுக்கிறது.
- வன்முறையின் வாடையே இல்லாமல் 15 வருடமாய் கட்சியை அதன் தொண்டர்களை நிர்வகித்து வருபவர்.
- சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டு தமிழர் சேவையையே பணியாக கொண்ட தமிழ் இன போராளி.
- காங்கிரசிற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் ஈழத்தில் தமிழனைக் கொல்ல நாம் அளிக்கும் ஒவ்வொரு தோட்டாவாகும். காங்கிரசின் வீழ்ச்சியே தமிழனின் உயிரைக் காக்கும். தமிழரின் சுயமரியாதையை டெல்லி உணர, இனிமேல் யார் டெல்லியில் அரியணையில் ஏறினாலும் தமிழர்களுக்கு துரோகம் செய்ய கனவிலும் நினைக்காமல் இருக்க காங்கிரஸை இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும்.
- கடுமையான பொருளாதார நெருக்கடி, கையில் காசு புழங்குவதே அரிதாய் உள்ளது. நடுத்தர குடும்பங்கள் விலைவாசி ஏற்றத்தில் தத்தளிக்கிறது. மேல் நடுத்தட்ட குடும்பங்களின் சேமிப்பு , பங்குச் சந்தை வீழ்ச்சியாய் ஏய்த்து கொள்ளையடிக்கப்பட்டது போன்ற அனைத்தும் கையாளாகாத காங்கிரசின் அதன் பிரபுக்களின் ஆட்சிக் கொடுமை. மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களின் கூட்டாச்சியே இதுவரை காங்கிரஸ் நடத்தியது.அவர்களை விரட்டி அடிக்க இதுவே தருணம்.
- ஈழத்தமிழருக்கும், ஈழத்தின் பால் இந்தியாவின் நோக்குகளை மாற்றவும், செயல்படுத்தவும் வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் அவசியம்.
- ஈழத்திற்காக நாங்கள் மட்டும் ஏன் வருந்த வேண்டும். எங்களிற்கு எங்களுக்காக பணியாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்தான் வேண்டும் எனும் அவா உள்ளவர்களின்(ஒரு சிலரில் மட்டும்) விருப்பம் வேடிக்கை அல்ல. வை.கோவும் அவர்களது சகாக்களும் உங்களின் எந்த பொதுத் தேவைகளையும் உடனடியாய்த் தீர்த்து வைப்பார்கள். வை.கோ அவர்களின் நாடாளுமன்றஅலுவலகம் எப்பொழுதும் உங்களிற்காய் திறந்து இருக்கும். விருதுநகர் தொகுதிக்கென்றே திட்டங்கள் தீட்டப்படும், பணிகள் செய்யப்படும்.
- இந்தியாவின் விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டார்கள். கிட்டத்தட்ட 4 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சம் விவசாயிகளின் குடும்பம் அவாக்ளின் தற்கொலைகளினால் நடுத்தெருவில் நிற்கிறது. அவர்களைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. அமெரிக்காவிற்கு அடிமை சாசனம் செய்ய மட்டுமே அரசாங்கத்தை 3 வருடம் பயன்படுத்திக் கொண்டார்கள். எப்பொழுதுமே காங்கிரஸ் ஆட்சி பணக் கொள்ளையர்களுக்கு மட்டுமே உதவி செய்துள்ளது. இனியும் அப்படிதான் செய்யும். அவர்களின் நோக்கத்திற்கு மரண அடி கொடுங்கள்.
- வை.கோவையும் மதிமுகவையும் அழித்து விடுவதிலேயே குறியாக இருப்பவர்களின் நோக்கம் என்ன? வை.கோ அரசியலில் இருக்கவே கூடாதா? அப்படி என்ன வை.கோ தவறு செய்துவிட்டார்? ஈழத்திற்கு குரல் கொடுத்தது தவறா? தா.கிருடிணன் கொலையை தட்டிக் கேட்டது தவறா? ஏகபோக கருணாநிதி குடும்ப அரசியலை விமர்சித்தது தவறா? ஈழத் தமிழர்களுக்குப் பச்சை துரோகம் செய்த கருணாநிதியை தட்டிக் கேட்டது தவறா? இலங்கையில் போரை இந்தியாவின் ஏழைக் குடியானவனின் காசைக் கொண்டு நடத்தும் இத்தாலி அம்மையாரை தட்டிக் கேட்பது தவறா? சுயமரியாதையை விரும்பும் நம் தமிழினத்தையே அழித்தொளிக்க முற்படும் காங்கிரஸ்க்கு உறுதுணையாய் நிற்கும் தமிழ் காங்கிரஸ் துரோகிகளை விமர்சிப்பது தவறா?
வாக்காளர்களே உங்களிடம் நியாயம் கேட்கிறோம். விடை அளியுங்கள். வைகோவிற்கும், மதிமுகவிற்கும் உங்களின் அங்கீகாரம் மிக அவசியமாகிறது. அதுவும் இப்போது மிக அவசியமாகிறது.
- நாட்டில் தேசப்பாதுகாப்பு என்பது அறவே இல்லை. காஷ்மீர், அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், வங்காளம், குஜராத் என்று எல்லை மாநிலங்ளில் மட்டுமே இருந்த பயங்கரவாத அச்சுறுத்தல், கடல் கடந்து மும்பைக்குள்ளும் தென்னகத்தில் கேரளாவெங்கும் விரவியுள்ளது. அதற்கு முழுக் காரணம் காங்கிரஸின் கையாளாகத்தனம் தான்.
- தமிழகக் காங்கிரசைப் பொறுத்தவரை அவர்களின் நோக்கம் அரசியல் வியாபாரம் தான். மக்களிற்கான சேவை தளத்தினிலிருந்து அவர்கள் வெகு துரம் போய்விட்டது மட்டுமல்லாமல் இத்தாலி எருமைக்கும் சப்பாணிக் கழுதைக்கும் அவர்களின் திட்டமிட்ட தமிழ் இனப் படுகொலைக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள். ஏதோ அமெரிக்கா பிரஜைகளைப் போல, தனக்கும், அழியும் தமிழ் இனத்திற்கும் சம்பந்தமில்லாதவர்கள் போல பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.
அவர்களின் தமிழின துரோகத்திற்கு சவ அடி கொடுக்க வை.கோ வை ஆதரியுங்கள்.
- ஒரு ரூபாய்க்கு அரிசி போடலாம். வீட்டுக்கொரு டி.வி. கொடுக்கலாம். புpன்பு ஊரெல்லாம் கொள்ளை அடிக்கலாம். இதுதான் மாநிலத்தை ஆளுகின்றவர்களின் எண்ணம். ஒரு ரூபாய் அரிசியும், டி.வி.யும் அரசாங்கப் பணத்திலிருந்தே கொடுக்கப்படுகிறது. அதைக் காட்டி ஏமாற்றி அரசியல் கொள்ளை அடிக்கும் அவர்களின் தனிச் சொத்தாய் போய் சேர்கிறது. அரிசியும், டிவியும் கொடுத்தால், நீங்கள் கொள்ளையடிப்பதையும், என் இன சகோதரர்கள், பெண்களையும் கொல்வதையும் கற்பழித்து நிர்மூலப்படுத்துவதையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமா?
- மத்தியிலும் மாநிலத்திலும் பின்பு உள்ளாட்சியிலும் வெற்றி பெற்று எதைச் செய்தார்கள் நாட்டிற்கு? தங்கபாலுவும், வசந்தகுமாரும் டி.வி. சேனல் ஆரம்பித்தார்கள். கலைஞர்; டி.வி. ஆரம்பித்தார்கள். ஊழல் செய்ய ஏதுவான திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்கள். பாலங்களைக் கட்டினார்கள். கமிஷன் பெற்றார்கள். ஸ்பெக்ட்ரம் திட்டத்தில் ஒரு லட்சம்கோடி சுருட்டினார்கள். பணம் சுருட்டியதைத் தவிர இவர்கள் செய்த சாதனை என்ன, கிராமங்களிற்கும் விவசாயத்திற்கும் என்ன செய்தார்கள்?
- ஒரு ரூபாய் அரிசியும்,. டி.வி. பெட்டியும், அகதி வாழ்க்கையும், தேர்தல் வந்தால் 500 அல்லது 1000 மட்டும் தமிழனுக்கு., தாம் கொள்ளை அடித்த பணத்திலிருந்து கொடுத்து அவன் சுயமரியாதையை இழக்க வேண்டும். பிச்சைக்காரன்ப் போல் வேசிப் பிழைக்க வேண்டும் என்பது தானே இந்த பரதேசிகளின் எண்ண ஓட்டம்?
- என்ன குற்றம் செய்தார்கள் ஈழத்தில் நம் இனச் சகோதரார்கள்? அவர்கள் முற்றிலும் அழித்தே கொல்ல ஏன் காங்கிரஸ் முயல்கிறது? ஏன் கருணாநிதி தமிழ் இனத்திற்கே துரோகம் செய்கிறார். நம்மை எல்லாம் முட்டாள் ஆக்க நினைக்கிறார்.
விடை கொடுங்கள். நடுநிலை நண்பர்களே !
வாக்காள சகோதர சகோதரிகளே!
ஆதரப்பீர் வைகோ வை ! வாக்களிப்பீர் பம்பரம் சின்னத்திற்கு !
தோழர்
www.mdmkonline.com