Monday, March 16, 2009

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ?

 1. ஈழத்தில் ஒரு தமிழனும் உயிரோடு இருக்க முடியாது . தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்.இவை எல்லாம் முடிந்த பின் இலங்கை இந்தியாவின் முதல் எதிரி நாடும் ஆகும்.தமிழகம் கொந்தளிப்பில் தள்ளப்படும் கிட்டத்தட்ட மனநோயாளிகளை போல தமிழக இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள்.
 2. அமெரிக்கா டாலரின் விலை ரூபாய் அறுபதை தொடும்
 3. இந்தியாவில் அரிசி விலை கிலோ அறுபதை தொடும்
 4. தமிழ்நாட்டில் தங்கபாலு வசந்தகுமார் போல மேலும் ஐந்து காங்கிரஸ் காரர்கள் டிவி தொடங்குவார்கள்.
 5. தங்கம் பவுன் 20000 ரூபாய் ஆகும்.
 6. விவசாயிகள் பயனடையாமல் பதுக்கல் வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பர்கள் அதன் பலன் விவசாயம் செய்ய ஆள் இருக்கமாட்டர்கள்.
 7. விலைவாசி உயர்வினால் பஞ்சம் வரும். கொலை கொள்ளை நாடு முழுவதும் அதிகரிக்கும்.
 8. பாதுகாப்பு கொள்கைகள் இல்லாததால் வாரம் ஒரு இடத்திலாவது குண்டு வெடிக்கும் குறைத்து ஆயிரம் பேர்கள் இறப்பார்கள்
 9. சீனா அருநாச்சலப்பிதேசதிற்காய் இந்திய மீது போர் தொடுக்கும் பாகிஸ்தானில் இருக்கபோகும் ராணுவ அரசு மீண்டும் ஒருமுறை கார்கில் போன்று போர்
 10. இந்தியா முழுவதும் மின்சாரப்பற்றகுறை . தினமும் 8 மணி நேரம் மட்டும் கிடைக்கும்.
 11. பாகிஸ்தானில் பாதி அரசாங்கமாக இருக்கும் தலிபான்கள் காஷ்மீர் மீது படைஎடுப்பர்கள்.
 12. அமெரிக்காவின் அடிவருடி கொள்கை இருக்கும் . அமெரிக்காஇல் எற்பட்டதைபோலவே இங்கும் எல்லா வங்கிகளும் திவால் ஆகும்.
 13. இவை யாவின் பலனை வேலையில்லா திண்டாட்டம் பெருகும் .
 14. அரசியல்வாதிகளை தவிர யாரிடமும் பணபுலக்கம் இருக்காது.
 15. கருணாநிதி அப்பொழுதும் கவிதை எழுதுவார்.தமிழர்களுக்காக அவர் பால் குடித்த நாள் முதல் செய்தவைகளை புள்ளி விவரங்களுடான் பட்டியல் போட்டு காட்டுவார்.
 16. அழகிரிக்கு நல்ல துறை இல்லை என்று மூன்று முறை மிரட்டியிருப்பார்.
 17. கனிமொழிக்கு வாய்த்த நல்ல பணம் பண்ணும் துறையால் தயாநிதிமாறன் மீண்டும் ஒருமுறை திமுகவை விட்டு விலகி இருப்பார்.
 18. கனிமொழி தனியாய் ஒரு டிவி தொடங்குவார்
 19. பழைய திமுக காரர்கள் தா கிருஷ்ணனை போல் கதியாவார்கள் .
 20. பெட்ரோல் விலை லிட்டருக்கு என்பது ரூபாய் ஆகும்.

6 comments:

 1. தோழரே, வைகோ எத்தனை ஆண்டுகளாக காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருக்கிறார் என சொல்ல முடியுமா? இதே காங்கிரசுடன் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒட்டி உறவாடினாரே அப்போ இந்த பட்டியல் எதும் நினைவுக்கு வரவில்லையா? ஈழத் தமிழர் மீதான இன அழிப்பை சிங்களப் படைகள் அப்போது செய்யவில்லையா?.

  உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்பிகிறேன். வைகோ , கருணாநிதியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் கூட்டணியிலிருந்து வெளியேறினார். காங்கிரசுடன் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இப்போ பேசுவதற்கு எந்தக் குறையும் மத்திய ஆட்சி மீது இல்லாததால் ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் எதிரி என்பது போல் சித்தரிக்க முயல்கிறார். நேத்து வந்த ராமதாசுக்கு 7+1 சீட்டுகளாம். ஆனால் வைகோவுக்கு எவ்வளவு தேறும்? உங்கள் பலம் என்ன?. தன் விருப்பத் தொகுதிகளையோ எண்ணிக்கையயோ வைகோவால் ஜெவிடம் பெற முடியுமா? தனக்கே சுதந்திரம் இல்லாலம் ஒரு அடிமையைப் போல் போயஸ் தோட்டத்தில் குடி இருப்பவர் ஈழத் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்க போராடுகிறார் என்றால் யார் நம்புவார்?

  நீங்கள் சொன்னதெல்லாம் நடக்கும் என்றாம் சில ஆண்டுகள் இந்த ஆட்சியை ஆதரித்தவர் என்ற வகையில் வைகோவிற்கும் அதில் பங்குண்டு.

  4 எம்பிக்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தர காங்கிரஸ் தயாராக இருந்தது. ஆனால் வைகோ வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன் கட்சியில் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான்.

  அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தேவையான மந்திரிப் பதவியை பெற்று ஈழத் தமிழருக்கு அதன் மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கலாம். அமைச்சரவைக் கூட்டங்களில் ஈழப் பிரச்சனையை கிளப்பிக் கொண்டே இருந்து எதாவது செய்திருக்கலா. ஆனால் அப்படி ஒன்றுமே செய்யாமல் இப்போது காங்கிரசைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது, முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் செயல்.

  ReplyDelete
 2. இவர் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்...
  //Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... வைகோ எத்தனை ஆண்டுகளாக காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருக்கிறார் என சொல்ல முடியுமா?//
  காங்கிரசை எப்போது எதிர்த்தார் என்று கேட்ட்கும் நீங்கள், ஈழத்தை எவ்வளவு வருசமாக ஆதரிக்கிறார் என்று ஈன எண்ணவில்லை? அவர் கட்சி தொடங்கிய நாள் முதல் அல்ல தி.மு.க வில் இருந்தபோதும் தனி ஈழம் அமைய வேண்டும் என்று போராடியவர்.
  அவர் கொள்கையில் எந்த நெளிவும் இல்லை.

  //காங்கிரசுடன் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒட்டி உறவாடினாரே அப்போ இந்த பட்டியல் எதும் நினைவுக்கு வரவில்லையா? ஈழத் தமிழர் மீதான இன அழிப்பை சிங்களப் படைகள் அப்போது செய்யவில்லையா?.//
  காங்கிரஸ் ஆட்சிக்கு மன்மோகன் தலைமையில் இயங்கியதால் தார்மீக ஆதரவு தந்தார். பின்னர் மன்மோகன் என்பவர் சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு அவர் குடும்ப பலி தீர்ப்பதற்கும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் இலங்கை இனவாத அரசுக்கு அதரவு தர முயன்ற ஒவ்வொரு முறையும் அதை எதிர்த்திருக்கிறார்.
  மக்கள் மத்தியில் உங்கள் அருமை மத்திய அரசு மறைமுகமாக செய்த ஆயுத உதவியை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டு காட்டிய முதல் தலைவர் எங்கள் வைகோ தான்.

  //ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் எதிரி என்பது போல் சித்தரிக்க முயல்கிறார்.//
  சித்தரிக்க முயல்கிறாரா. அப்போது உங்கள் அரசு மிகவும் நல்லவர்கள். இன்று அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொன்று குவிகப்ப ட்டு வருகிறபோது வாயும் பிரவற்றும் பொத்திக்கொண்டு இலங்கை பாசியா அரசுக்கு ராஜாங்க ரீதியில் ஆலோசனை, இராணுவ ஆலோசனை, மென்பொருள் ஆலோசனை ஆசிரியர் பயிற்சி என்று சிங்களனை தலையில் துஉகி வைத்துக்கொண்டு தமிழக மக்களின் குமய்ரலை நாற்காலியில் போட்டு அதன் மீது உட்கார்ந்து நசுகிவிட்டு எப்படி எப்படியெல்லாம் பேச முடிகிறது???!

  //4 எம்பிக்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தர காங்கிரஸ் தயாராக இருந்தது. ஆனால் வைகோ வேண்டாம் என்று சொல்லிவிட்டார். //
  அபோது காங்கிரஸின் சுய ரூபம் யாருக்கும் தெரியாது எனக்கும் கூட.. மன்மோகன் அரசு நம்பிக்கை வாகெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்று மனமார விரும்பியவன் நான். அதன் பின் அவர்கள் செய்த கொடுமை அந்த ஆடவனும் மன்னிக்க மாட்டன் மறந்து விடாதேர்கள்..

  http://tamilarnesan.blogspot.com/

  இப்போது புறப்பட வேண்டி உள்ளது.. மீண்டும் சந்திப்போம்..

  ReplyDelete
 3. பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

  பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்

  இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி

  ஆயுதம் விற்போம்-(பாரத...)

  போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்

  தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)

  சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை

  செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)

  உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்

  அதையும் விட்டு விடு -அடிமை

  சாசனம் அமைப்போம் வா என்கின்றது....

  புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............

  ReplyDelete
 4. எங்கள் விருது நகர் தொகுதியில் வைகோ...!
  விருது நகர் தொகுதி சார்பாக வைகோ பாராளுமன்றம் செல்வார்..என உறுதியாக நம்புகிறேன்...

  ReplyDelete
 5. அருமையான பதிவு ஈழம் பற்றி நானும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் நன்பா பாருங்க்ள்

  ReplyDelete
 6. Vaiko was a good parlimentarian. He had a big chances from he came out of DMK. Everyone was expecting he will become the mass leader.

  He him self spoiled many things.

  His victory in this election is also 50 : 50 Only.

  We can only pity on him.

  ReplyDelete